Read in English
This Article is From Oct 22, 2018

நீரில் மூழ்கிய 6 வயது குழந்தையை காப்பாற்றிய டெலிவரி பாய் - #வீடியோ

குழந்தையை டெலிவரி பாய் காப்பாற்றிய வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement
விசித்திரம்

தண்ணீரில் குதித்து குழந்தையை இளைஞர் காப்பாற்றும் காட்சி.

சீனாவில் உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் செய்த மனிதாபிமான செயல் லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் சோஷிங் நகரில் உள்ள ஆற்றின் அருகே 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டது. பின்னர் அந்த குழந்தை ஆற்றில் தத்தளிக்க தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு குழந்தை இதனைப் பார்த்து கத்தியது.

அப்போது அந்த வழியாக பைக்கில் டோர் டெலிவரி செய்யும் இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்த காட்சியை பார்த்ததும், பைக்கை நிறுத்தி விட்டு ஆற்றுக்குள் குதித்து குழந்தையை காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றியவர் 23 வயதான ஹீ லின்பெங் என டெய்லி மெய்ல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

  .  

மனிதாபிமான செயலை செய்த லின்பெங்குக்கு அவர் பணியாற்றும் நிறுவனம் விருது மற்றும் ரொக்கப்பணம் வழங்கி கவுரவித்துள்ளது.

 

Advertisement
Advertisement