This Article is From Sep 05, 2018

பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி! முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் இன்று விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது

பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி! முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு
New Delhi:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் இன்று விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

விவசாயிகளுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காத நிலை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரியும், தேசிய வேளாண்மை ஆணையத்தின் பரிந்துரை விலையை மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தியும், விவசாய சந்தையில் பன்னாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணி நடத்த போவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து, ராம்லீலா மைதானத்தில் இருந்து தொடங்கிய பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பாராளுமன்ற தெருவில், நீண்ட வரிசையில் சிவப்பு கொடிகளாக காட்சி அளித்தன.

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் விவசாய அமைப்புகள், மஸ்தூர், கிசான் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றதாக பேரணி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி டெல்லியில் உள்ள அஷோகா சாலை, பாபா கரக் சிங் மார்க் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

.