2nd Demonetisation Anniversary: Arun Jaitley : பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பேஸ்புக்கில் விளக்கம் அளித்திருக்கிறார் அருண் ஜெட்லி
New Delhi: Demonetisation anniversary: மத்தியில் பாஜக அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம், புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிதாக ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த (Demonetisation anniversary) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களும் தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ததால் கருப்பு பணம் ஒழியக்கூடும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தின் மதிப்பை ஈடு செய்யும் அளவுக்கு, வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்கு ஆளானது.
வங்கி ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், கையில் இருந்த ரூ. 500, ரூ.1,000 பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அதனை உரிய இடங்களில் செலுத்த முடியாததாலும் நாட்டின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேஸ்புக் பக்கத்தில், நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிமுக்கிய நடவடிக்கைதான் பணமதிப்பிழப்பு. கணக்கில் வராத பணங்கள் பெரும்பாலானவை வங்கிக்கு கொண்டு வரப்பட்டன. ரூபாய் நோட்டை தடை செய்வது என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் அல்ல. நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்கு. இதனால் வரி செலுத்தபவர்கள் அதிகரித்துள்ளனர். வரிகள் மூலம் நாட்டின் வருவாய் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.