கங்ரா மாவட்டத்தில் டெங்குவினால் 100பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
Kangra (Himachal Pradesh): அக்.10 ஆம் தேதி வரை கங்ரா மாவட்டத்தில் 100 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கங்ரா மாவட்டத்தின், தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.எஸ் ராணா பேசுகையில், டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
டெங்குவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஆஷா மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி வருகின்றனர். கொசுக்களை ஒழிப்பதற்காக புகை மூட்டம் போடப்பட்டு வருகிறது என்று ராணா ஏ.என்.ஐயிடம் கூறினார்.
மேலும், டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை டெங்குவினால், உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.