Read in English
This Article is From Feb 03, 2019

மேற்கு வங்கத்தில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை!

முன் அறிவிப்பின்றி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா (with inputs from PTI)
Balurghat:

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க, மேற்கு வங்க அரசு அனுமதிஅளிக்க மறுத்துவிட்டது. கொல்கத்தாவில் இருந்து 400கி.மீ தொலைவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பலூர்காத் இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார்.

இந்நிலையில், முன் அறிவிப்பின்றி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, யோகி ஆதித்யநாத் தகவல் ஆலோசகர் மிருதுன்ஜெய் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, புகழ்பெற்ற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

Advertisement

இதோடு இரண்டாவது முறையாக பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் அமித்ஷாவுக்கு இதேபோல் அனுமதி மறுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டு இருந்தார். பலூர்காத் பகுதியில் அவருடைய ஹெலிகாப்டரை தரையிறக்கி அங்கிருந்த பேரணி இடத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.

Advertisement

ஆனால், எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி திடீரென உ.பி. முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், பேரணியில் பங்கேற்க உ.பி. முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேரணியில் உரையாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement