Read in English
This Article is From Aug 22, 2019

சுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்

இப்பகுதியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்கள் பொதுவாக இறந்தவர்களை வேறு தளத்தில் அடக்கம் செய்கிறார் இருப்பினும் “இயற்கைக்கு மாறான மரணங்கள்” ஏற்பட்டால் பாலத்தை தாண்டி உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by
Vellore, Tamil Nadu:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலத்திலிருந்து தலித்தின் சடலத்தை இறக்கும் இறுதி ஊர்வலத்தைக் காட்டும் வீடியோ ஒன்று ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.  

சுடுகாட்டிற்கு பாலத்தில் உடலைக் கொண்டு செல்ல உயர்சாதியினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து   நூதன முறையில் பாலத்திலிருந்து உடலை இறக்கி கொண்டு சென்றுள்ளனர்.  உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இறுதி ஊர்வலத்தை பாலத்தின் மீது கொண்டு செல்ல எதிர்க்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

“பத்தாண்டுகளுக்கு முன்னர் உயர்சாதி சொத்து உரிமையாளர்கள் இப்பகுதிக்கு வேலி அமைத்தனர். பாலத்திலிருந்து கீழே இறங்குவதற்கு படிக்கட்டுகள் உள்ளன. ஆனால், எங்களால் உடலை எடுத்துச் செல்ல முடியாது. எங்களுக்கு வேறு சாலை அலல்து சுடுகாடு வேண்டுமென “ இறந்தவரின் மருமகன் விஜய் NDTV க்கு பேட்டியளித்தார். 

இப்பகுதியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்கள் பொதுவாக இறந்தவர்களை வேறு தளத்தில் அடக்கம் செய்கிறார் இருப்பினும் “இயற்கைக்கு மாறான மரணங்கள்” ஏற்பட்டால் பாலத்தை தாண்டி உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

Advertisement

இறந்தவர், குப்பன் வயது 65 சில நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். 

கடந்த பத்தாண்டுகளில் இயற்கைக்கு மாறான மரணம் ஏதும் நிகழாததால் இதுவொரு பிரச்னையாக எழுந்ததில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

Advertisement

இறுதி ஊர்வலத்திற்கு தனியார் சொத்துக்களை பயன்படுத்த எந்த கோரிக்கையும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் ஏ. சண்முக சுந்தரம் கூறிய கருத்துப்படி ஆறுப்படுகையில் அமைந்துள்ள தகன இடம் அங்கீகரிக்கப்படாதது. இருப்பினும் சில ஏற்பாடுகளை செய்ய முடியும். 

Advertisement

இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு திருப்பத்தூர் தாலுகாவின் துணை கலெக்டர் பி. பிரியங்கா உத்தரவிட்டுள்ளார். “நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். தேவைப்பட்டால் மாற்று தகன இடத்தைக் கூட கண்டுபிடிப்போம்”என்று அவர் NDTV தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் தெற்கு மாவட்டங்கள் பல்வேறு தீண்டாமை மற்றும் வகுப்புவாத மோதலைக் கண்டுள்ளது. 

Advertisement