இது குறித்தான வழக்கில் சிபிஐ, 2015-ல் வழக்குப் பதிவு செய்தது.
Panchkula, Haryana: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, ஆண்மை நீக்க வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தனது ஆசிரமத்தில் இருக்கும் ஆண் ஆதரவாளர்கள் பலருக்கு, கட்டாய ஆண்மை நீக்கம் செய்ததாக, ராம் ரஹீம் மீது குற்றச்சாட்டு இருந்தது. இது குறித்து சிபிஐ, 2015 ஆம் ஆண்டு, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் தான் இது குறித்தான வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ராம் ரஹீமுக்கு பிணை வழங்கப்பட்டது.
ஆனால், பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதனால், பிணை கிடைத்தும் அவரால் வெளியே வர முடியாத சூழல் இருக்கிறது.