This Article is From Feb 14, 2019

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம்!

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தேவ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
Entertainment Posted by

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தேவ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தை இன்று திரைக்கு கொண்டு வந்தனர். முதல்காட்சி காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் மாலைக்குள் தமிழ் ராக்கர்ஸில் படம் வந்திருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதேபோன்றுதான் 2.0 திரைப்படம் திரைக்கு வந்தபோது அதேநாளில் படத்தை வெளியிட்டு தமிழ்ராக்கர்ஸ் அட்டகாசம் செய்தனர். அவர்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டும் ராக்கர்ஸை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பேன் என்று 2 ஆண்டுகளாக கூறி வருகிறார். அப்படி ஒரு வெப் அட்ரஸை பார் செய்தாலும், புதிய முகவரியில் பீனிக்ஸாய் பறக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisement

புதிய ஜேனரில் வெளிவந்துள்ள தேவ் கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் வசூல் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement