This Article is From Jul 20, 2018

‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது!’- உச்ச நீதிமன்றத்தில் தேசவசம் போர்டு உறுதி

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை, தேவசம் போர்டு

‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது!’- உச்ச நீதிமன்றத்தில் தேசவசம் போர்டு உறுதி

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 55 வயதுப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ரோஹிந்தன் நரிமான், கான்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட 5 பேர் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு குறித்து நீதிமன்றம், ‘ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வழிபடுவதற்குச் சம உரிமை உள்ளது. குறிப்பிட்ட வயதுடையவர்களை தூய்மையற்றவர்களாகக் கருதி விலக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஒருவரின் வயதைக் காரணம் காட்டி, வழிபடுபவர்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது. மேலும், மாதவிலக்கை மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியது. மேலும், ‘அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறியது.

இதற்கு சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு, ‘சபரிமலையில் 10 முதல் 55 வயதுள்ள பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காலத்தில் 10 முதல் 55 வயதுள்ள பெண்களை அனுமதித்தால், கோயிலின் புனிதம் பாதிக்கப்படும். சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களால், தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பன போன்ற காரணங்களுக்காக அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று பதில் வாதம் வைத்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.