This Article is From Jul 28, 2019

தோட்டாக்கள், வெடிகுண்டுகளை விட வளர்ச்சியே வலிமையானது -மான் கி பாத் நிகழ்சியில் பிரதமர் பேச்சு

ஆகஸ்ட் 15-ம் தேதி நம்முறைய சுதந்திர தினம் கிராமங்களில் கொண்டாடப்படும் விழா போன்று மக்களின் விழாவாக இருத்தல் வேண்டும்.

தோட்டாக்கள், வெடிகுண்டுகளை விட வளர்ச்சியே வலிமையானது -மான் கி பாத் நிகழ்சியில் பிரதமர் பேச்சு

25 நிமிட உரையில் சந்திராயன் ஏவுகணை குறித்தும் பேசினார்

ஹைலைட்ஸ்

  • காஷ்மீரை வெறுப்பு அரசியல் மூலம் கைப்பற்ற முடியாது
  • காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள்
  • மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் பேசினார்
New Delhi:

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் ‘மான் கி பாத்'வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகின்றார். அதன்படி இந்த மாத நிகழ்ச்சியில் பேசியபோது துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி மேம்பாடு வலிமையானது, வெறுப்பை பரப்பி காஷ்மீரின் வளர்ச்சித் திட்டங்களைத் தடை செய்ய நினைப்பவர்கள் எண்ணம் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார். 

பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் காஷ்மீரில் வளர்ச்சி, சந்திரயான் -2 செயற்கைக் கோள், சுதந்திர தினம், அமர்நாத் யாத்திரை உள்ளிட்டவை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு:

ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்து, ஜூன் மாதத்தில் இருந்து எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த கிராமத்துக்கு ஆர்வத்துடன் திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் அவர்களுடன் ஆலோசித்து தேவையான வளர்ச்சித் திட்டங்களை செய்து வருகிறார்கள். மக்களின் ஆர்வத்தைப் பார்க்கும் போது வளர்ச்சி பாதைக்கு வருவதற்கு ஆசையுடன் இருப்பதை காட்டுகிறது. மக்கள் நல்ல சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள்.அதில் பங்கு பெறவும் விரும்புகிறார்கள். இதன்மூலம் துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சியும் மேம்பாடும் வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக 4500 பஞ்சாயத்துகளில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாயும் இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கே சென்று மூத்த அதிகாரிகள் மக்களுடன் பேசி தேவையை அறிந்து வருகின்றனர். சோபியான், புல்வாமா, குல்கம். ஆனந்த்நாக் மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில் இப்போது மக்கள் அச்சமில்லாமல் வசிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று நமது தேசத்தின் சுதந்திர தினத்தை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். எந்தெந்த வழிகளில் சிறப்பாகக் கொண்டாடலாம் என்பதை மக்கள் கண்டறிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி நம்முறைய சுதந்திர தினம் கிராமங்களில் கொண்டாடப்படும் விழா போன்று மக்களின் விழாவாக இருத்தல் வேண்டும்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு மின்னல் வேகத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மீட்டுபணிகளில் ஈடுபட்டுள்ளது.

என்று பிரதமர் மோடி பேசினார்.

.