இதேபோன்ற தீ விபத்து கடந்த 2010-ல் ஏற்பட்டது. அதில் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
Dhaka: வங்க தேசத்தில் நேற்று இரவு குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்றிரவு 10.40-க்கு தீ விபத்து ஏற்பட்டது. ஓரிடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் பரவியது. கட்டிடத்தில் ஏராளமானோர் இருந்ததால், அவர்கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கியும், புகையில் மூச்சுத் திணறியும் 69 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பில் ரசாயன கட்டிடம் ஒன்று இருந்ததாகவும், அதில் தீ விபத்து ஏற்பட்டதுதான் இத்தனை இழப்புகளுக்கு காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற தீ விபத்து கடந்த 2010-ல் ஏற்பட்டது. அதில் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தே காரணம். இந்த சம்பவத்திற்கு பின்னர் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதில் முறைகேடுகள் நடந்திருப்பதைத்தான் இந்த விபத்து எடுத்துக் காட்டுகிறது.
மேலும் படிக்க - “200 அடி ஆழ்துழை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்”
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)