This Article is From Jan 03, 2020

“என்னை கழுத்த புடிச்சு வெளிய தள்ளுங்க…”- தேர்தல் குளறுபடி; அதிகாரியிடம் சீறிய தர்மபுரி எம்பி!!

TN Local Body Election News: தேர்தல் அதிகாரி, மறு வாக்குப் பதிவு நடத்துவதாக சொன்ன பின்னர்தான், அவர் சாந்தமடைந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

TN Local Body Election News: செந்தில் குமார் ஆவேசமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TN Local Body Election News - தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து, நேற்று இரவு, இன்றும் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தர்மபுரி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி முறைகேடாக நடந்து கொண்டார் என்று, அவர் முன்னாலேயே சீறியுள்ளார் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார். 

தர்மபுரி ஒன்றிய கவுன்சில்களான வார்டு 8 மற்றும் 18ல், பதிவான தபால் ஓட்டுகளை எண்ணுவதில் முறைகேடு நடந்திருப்பது செந்தில் குமாருக்குத் தெரியவந்துள்ளது. நியூகாலனி மற்றும் பழைய தர்மபுரி ஒன்றியத்தில் எண்ணப்பட்ட வாக்குகளில்தான் குளறுபடி நடந்ததாக சொல்லப்பட்டுகிறது. அந்த வார்டுகளில் திமுக பெற்ற வெற்றியை தேர்தல் அதிகாரி, அதிமுக பெற்றதாக மாற்றிக் கூறியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் செந்தில் குமார் எம்பி வாக்குவாதம் செய்யும் வீடியோவில், “சார், தபால் வாக்கு எண்ணதா சொல்றீங்க. எங்க தரப்பு ஏஜென்ட் வச்சு அதை செஞ்சீங்களா. இப்ப நான் ஏஜென்ட் கூப்பிட்றேன். அவர் முன்னாடிதான் எண்ணுணேன்னு சொல்லுங்க. அதை ப்ரூவ் பண்ணுங்க. ப்ரூவ் பண்ணி, என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க.

Advertisement

ஏன் முன்னாடி நீங்க எதுக்கு தலை குனிஞ்சு நிக்கணும். உண்மைய ப்ரூவ் பண்ணி என்னை வெளியே கழுத்தைப் பிடிச்சு தள்ளுங்க,” என்று கூறி மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை இடத்தை காலி செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தேர்தல் அதிகாரி, மறு வாக்குப் பதிவு நடத்துவதாக சொன்ன பின்னர்தான், அவர் சாந்தமடைந்தார். செந்தில் குமார் ஆவேசமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement