இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஹைலைட்ஸ்
- கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதீனம் இப்படி பேசியுள்ளார்
- ஆதீனத்தின் கருத்தை ட்விட்டர் மூலம் மறுத்துள்ளார் தினகரன்
- அதிமுக-வில் இணைய அவசியமில்லை- தினகரன்
அமமுக துணைப் பொதுச் செயலாளர், டிடிவி தினகரன், அதிமுக-வில் இணைவார் என்பது உறுதி என்று தகவல் தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம்.
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதீனம், ‘அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அந்த இயக்கத்தில் இணைவார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தினகரன் கண்டிப்பாக அதிமுக-வில் இணைவார் என்பது உறுதி' என்று திட்டவட்டமாக கூறினார்.
இதையடுத்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுக-வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை!' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரனுடனான பிரச்னை குறித்து கலைராஜன் இன்று பேசுகையில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. திராவிட இயக்கத்தைக் காப்பாற்றும் திராணி ஸ்டாலினுக்கு மட்டும்தான் உள்ளது என்பதை உணர்ந்து திமுக-வில் என்னை இணைத்துக் கொண்டேன். நான் இன்று அவசரமாக இணைந்தாலும், சீக்கிரமே பலர் அதிகாரபூர்வமாக இணைவர்' என்று முடித்துக் கொண்டார்.