இன்று உலகளாவிய ஆரோக்கிய குறைபாடாக இருப்பது நீரிழிவு நோய். 1980-களில் 108 மில்லியன் மக்களை பாதித்த இந்த சர்க்கரை நோய் 2014 ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 422 மில்லியனாக உயர்ந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களே நீரிழிவு நோயாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக உணவு பழக்க வழக்கங்களில் எவ்வித சமாதானமும் செய்து கொள்ள கூடாது. செயற்கை இனிப்பூட்டிகள் கலக்கப்படும் உணவு, எரெடட் பானங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, செரிமானம் தாமதமாகி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். சில மசாலா பொருட்கள் மற்றும் மூலிகைகள் இயற்கையாகவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கூடியவை. அதில் ஒன்று தான் அஸ்வகந்தா. கொரியன் மக்களின் வெவ்வேறு உணவுகளிலும் மருத்துவங்களில் இந்த அஸ்வகந்தா பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் எடை குறைப்பில் அஸ்வகந்தாவிற்கு முக்கிய பங்கு உண்டு. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அஸ்வகந்தாவை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.
நீரிழிவு நோயை தடுக்க அஸ்வகந்தா டீ
பிலிஸ் ஏ. பால்ச் தான் எழுதிய "Prescription for Healing " என்ற புத்தகத்தில் அஸ்வகந்தாவின் நன்மைகளை பற்றி தெளிவாக கொடுத்துள்ளார். அஸ்வகந்தாவில் டீ செய்து குடித்து வந்தால், உடலில் இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு அதன் பயன் நீடித்து இருக்குமாம். இதனால் டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. இந்த டைப் 2 நீரிழிவு நோயை பொறுத்த வரை, கணையத்தில் சுரக்கும் இன்சுலினிற்கு உடல் ஒத்துழைக்காமல் இருக்கும். இதனால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இந்த வகை நீரிழிவு நோயை உடனடியாக சரிசெய்யவிட்டால் சிறுநீரகம் செயல் இழக்கும் வாய்ப்பு அதிகம். மேலும், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் ஏற்படக்கூடும். இன்சுலின், க்ளைபுரைட், க்ளிமிபிரிட் மற்றும் க்ளிபிசிட் போன்ற இரத்த சர்க்கரையை குறைக்கும் சுரப்புகளை சீராக வைத்திருக்கும் தன்மை அஸ்வகந்தாவிற்கு உண்டு. ஆசிய மற்றும் கோரிய நாடுகளில் கிடைக்கக்கூடிய அஸ்வகந்தா உடலில் வெப்பத்தை உருவாக்கும். ஆனால், அமெரிக்க நாடுகளில் கிடைக்க கூடிய அஸ்வகந்தா இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது.
அஸ்வகந்தா இரத்த சர்க்கரையை குறைக்கும் சுரப்புகளை சீராக வைத்திருக்கும்.
அஸ்வகந்தா டீ தயாரிப்பது எப்படி?
* சன்னமாக அஸ்வகந்தா வேரை சீவி கொள்ள வேண்டும்.
* பாத்திரத்தில் நான்கு கப் சுடு தண்ணீர் ஊற்றி அதில் வெட்டி வைத்த அஸ்வகந்தா வேரை போட்டு மூடி வைக்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து அதனை வடிக்கட்டி டம்ப்ளரில் ஊற்றி வெதுவெதுப்பாக குடித்து வரலாம்.
* அஸ்வகந்தா வேரை பொடி செய்தும் இதேபோல் பயன்படுத்தலாம்.