Read in English
This Article is From Nov 22, 2018

“2030-க்குள் 10 கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும்”- ஆய்வில் அதிர்ச்சி

சீனாவில் 13 கோடி பேருக்கு சர்க்கரை நோய் வரும் 2030-க்குள் வந்து விடும் என்று ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

Advertisement
Food

டைப் -2 வகை சர்க்கரை வியாதி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது 40 கோடி பேர் உலகம் முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 51 கோடியாக 2030-க்குள் அதிகரித்து விடும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த தகவல்கள் சர்வதேச சர்க்கரை நோய் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆவணங்களில் இருந்து மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரும் 2030-க்குள் 13 கோடி பேருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு தேவைப்படும் இன்சுலினின் தேவை உலகம் முழுவதும் 20 சதவீதம் அதிகரிக்கும். இந்த பிரச்னைகளுக்கு வயது முதிர்ச்சி அடைதல், நகர்மயமாதல், டயட்டில் மாற்றம், உடற்பயிற்சி குறைவு உள்ளிட்டவை முக்கிய காரணங்கள்.

இதனை கட்டுப்படுத்த இன்சுலினின் தேவையை அரசு குறைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்க்கரை நோய் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

Advertisement
Advertisement