டொனால்ட் ட்ரம்பின் மூன்றுநாள் இங்கிலாந்து பயணத்தில் சில சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறியுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் மூன்றுநாள் இங்கிலாந்து பயணத்தில் சில சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறியுள்ளன. இதில் முக்கிய நிகழ்வாக ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி பங்கிங்ஹாம் மாளிகைக்கு வரவேற்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பில் ட்ரம்ப் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கை கொடுப்பதற்கு பதில் 'ஃபிஸ்ட் பம்ப்' செய்வது போன்ற காட்சியாக இருந்தது.
பல சமூக வலைதளங்கள் ட்ரம்ப் ஃபிஸ்ட் பம்ப் செய்யவில்லை என்று கூறின. "கைகுலுக்குவதற்கு பதிலாக கையை கொடுத்துள்ளார் ட்ரம்ப். அது வீடியோ ஆங்கிளில் தவறாக தெரிகிறது" என்று கூறினர்.
எனினும் இது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. இங்கிலாந்தின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று ''ராணியை தொடுவது தவறு'' என்பது என பலரும் சர்ச்சையை எழுப்பி வருகின்றனர்.