Read in English
This Article is From Nov 17, 2018

சபரிமலைக்கு மீண்டும் வரலாமா? என்பது குறித்து ஆலோசனை: திருப்தி தேசாய் பேட்டி

போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பிருந்ததாக திருப்தி தேசாய் கூறினார்.

Advertisement
இந்தியா Posted by

முன்னதாக, தனது முடிவிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்று திருப்தி தேசாய் கூறியிருந்தார்.

Kochi:

திருப்தி தேசாய் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில், சபரிமலைக்கு செல்வதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமானால் அதை குறித்து தான் மறுபரிசீலனை செய்வதாக கூறியிருந்தார். மேலும் இங்கிருக்கும் சூழ்நிலை குறித்து விளக்கிய போலீசார் எங்களை திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டனர். அடுத்த முறை நாங்கள் வரும்போது நிச்சயம் எங்களுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் என்று கொச்சி விமானநிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் கூறினார். திருப்தி தேசாய் விமான நிலையம் வந்ததும் போராட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்தி தேசாய் தனது இணை ஆர்வலர்கள் 6 பேருடன் விமான நிலையத்தில் இருந்தபோது போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள் நுழைவதற்கு வாய்ப்பிருந்ததாக தெரிவித்தார். இங்கு நான் சட்ட ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்த வரவில்லை என்றும் நான் என்னுடைய குழுவின் இதர உறுப்பினர்களிடம் சபரிமலைக்கு மீண்டும் வரலாமா? வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். மாலை 6.30 மணிக்கு அவர் இந்த முடிவிற்கு வந்தார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து கேரளாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயற்சித்தும் போராட்டக்காரர்கள் அவர்களது முயற்சியினை தோற்கடித்து வருகிறார்கள்.

Advertisement

இதனை தொடர்ந்து, புனேயைச் சேர்ந்த பெண் ஆர்வலர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு சபரிமலைக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையத்தை அடைந்தனர். விமானநிலையத்தை போராட்டகாரர்கள் முற்றுகை இட்டதனால் அவர்களால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களின் தகவலின் படி, பதினம்திட்டா பகுதியில் உள்ள ஹோட்டல் அறைகளில் திருப்தி தேசாய் அல்லது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்று போராட்டக்காரர்கள் சோதனை செய்தது தெரிய வந்துள்ளது.

Advertisement


 

Advertisement