This Article is From Sep 03, 2019

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இவை உதவும்!!

டெங்கு பாதிப்பு இருக்கும்போது நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.  எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், கஃபைன், மசாலா பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போனேடட் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.   

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இவை உதவும்!!

ஹைலைட்ஸ்

  • டெங்கு பாதிப்பை குணப்படுத்த பப்பாளி இலைச்சாறு அருந்தலாம்.
  • டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்த கூடாது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை மொத்தமாக அழிக்க வல்லது டெங்கு.

வருடாவருடம் டெங்குவின் பாதிப்பால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.  டெங்கு மற்றும் நோய் தொற்று கிருமிகளால் உண்டாகும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  சரியான உணவு மற்றும் மருந்துகளால் இதில் இருந்து தப்பலாம்.  சில சமயம் உயிரை குடிக்கக்கூடிய கொடூரம் டெங்குவிற்கு உண்டு.  வீட்டிலேயே இயற்கை வழியில் டெங்குவை போக்க சிலவற்றை பயன்படுத்தலாம்.  அவை டெங்குவில் இருந்து உங்களை பாதுகாக்கும்.  

1. பப்பாளி இலை சாறு: 

டெங்குவை சரிசெய்ய பப்பாளி இலை சாறு எடுத்து அருந்தலாம்.  இதனை குடிப்பதால் இரத்தத்தில் ப்ளேட்லெட் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.  பப்பாளி இலையை அரைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் டெங்குவில் இருந்து தப்பலாம்.  

2. காய்கறி சாறு: 

காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது.  பல காய்கறிகளை சேர்த்து அதன் சாறு எடுத்து பருகலாம்.  காய்கறி சாறுகளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலுக்கு வைட்டமின் சி சத்து கிடைக்கும்.  

 

2j34fe7

 

3. இளநீர்:

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  இதனை ஈடுகட்ட இளநீர் குடிக்கலாம்.  தினமும் இரண்டு டம்ளர் இளநீர் குடித்து வரலாம்.  தினமும் இளநீர் குடித்து வருவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் நோய் தொற்று ஏற்படாது.   

4. ஹெர்பல் தேநீர்: 

இஞ்சி டீ, ஏலக்காய் டீ அல்லது பட்டை சேர்த்த மசாலா தேநீரை அருந்துவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.  அடிக்கடி இதுபோன்ற மூலிகை பொருட்கள் சேர்த்து தேநீர் குடிப்பதால் உடலும் மனமும் ஆற்றுப்படுகிறது.  

5. வேப்பிலை: 

வேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.  உடலில் டெங்கு நோய் தொற்று பரவாமல் இருக்க இதனை பயன்படுத்தலாம்.  

 

 

ughs39v

 

தவிர்க்க வேண்டியவை:

டெங்கு பாதிப்பு இருக்கும்போது நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.  எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், கஃபைன், மசாலா பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போனேடட் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.   

.