ஹைலைட்ஸ்
- சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வில் அனுஷ்கா பாண்டா முதலிடம் வகித்தார்
- குர்கான் சன்சிட்டி பள்ளியில் மாணவரான இவர் 97.8 சதவீதம் பெற்றார்
- அனுஷ்கா, 14, முதுகெலும்பு தசைநார் என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்
New Delhi:
10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பிடித்த மாற்று திறனாளி அனுஷ்கா பாண்டா, தனக்கு உரிமையான கூடுதல் அரை மணி நேரத்தை பயன்படத்தாமலே வெற்றி அடைந்ததால் பெருமை படுகிறார். குர்கான் சன்சிட்டி பள்ளி மாணவியான இவர் 97.8% எடுத்து முதலிடம் பிடித்தார்.
முதுகெலும்பு தசைநார் மரபு பிரச்னை இருக்கும் அனுஷ்காவால் வீல் சேர் இல்லாமல் நகர முடியாது. அதனால் அவரது பள்ளி, தேர்வுக்காக சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அனுஷ்கா மாற்று திறனாளியாக இருந்தாலும் கூட அவளுக்கு சிறப்பு சேவைகள் ஏதும் தேவை இல்லை என அவரது தந்தை தெரிவிக்கிறார். "முதுகெலும்பிற்கு எந்த உதவியும் இல்லாமல் நீண்ட நேரம் ஒக்கரா முடியாமல் ஒக்கரா முடியாது" என அவர் தெரிவித்தார்.
கர்னாடிக் சங்கீதம் பயின்ற அனுஷ்கா, மென்பொருள் பொறியியல் படிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளார். "என்னால் நடக்க முடியாது, நீண்ட நேரம் ஒரு வேலையை செய்ய முடியாது; அது எனக்கு தடங்கல் தான். அதை தாண்டி வரவே இன்னும் முயற்சி செய்து படித்தேன்" என்கிறார் அனுஷ்கா