This Article is From Mar 19, 2020

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முயன்ற திக்விஜய சிங் கைது!

கடந்த சனிக்கிழமையன்று ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முயன்ற திக்விஜய சிங் கைது!

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முயன்ற திக்விஜய சிங் கைது!

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் உட்பட இரண்டு தலைவர்கள் கைது
  • எம்எல்ஏக்கள் ராஜினாமா கமல்நாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது
  • பாஜகவால் எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
Bengaluru:

அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்கு தங்களை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து பெங்களூரு காவல் ஆணையரை சந்தித்த போது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் உட்பட இரண்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவே எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்த விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள கமல்நாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனிடையே, பாஜக ஆளும் கர்நாடகாவில் தங்களது எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்தது. எனினும், அவர்களில் பலர் தங்களது சொந்த விருப்பப்படியே இங்கு வந்ததாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மேலும், சபாநாயகர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தங்களது ராஜினாமாவை நேரில் வந்து உறுதிப்படுத்தப் பாதுகாப்பும் அவர்கள் கோரியுள்ளனர். 

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய சிங் கூறும்போது, அந்த எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நான் 5 எம்எல்ஏக்களுடன் பேசினேன். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24மணி நேரமும் போலீசார் உள்ளனர் என்று அவர் கூறினார். 

அதே நேரத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் "அனைவரும் பணம் பெற்றுள்ளார்கள்" என்றும், பாஜகவின் காரணமாகவே அவர்கள் காங்கிரஸைத் விமர்சித்து வீடியோக்களை வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக அவர்களை வாங்கியதாக நான் குற்றம் சாட்டவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் சிலர் அவர்களுடன் சேராதவர்கள், பணம் வழங்கப்படுவதை ஆடியோ மற்றும் வீடியோ கிளிப் ஆதாரங்களாகக் காட்டியுள்ளனர்" என்று சிங் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, இன்று காலை எந்த எம்.எல்.ஏவும் திக்விஜய சிங்கை சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறி, அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, பெங்களூரு சொகுசு விடுதிக்கு வெளியே அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமாவில் உறுதியாக இருந்தால், மத்தியப் பிரதேசத்தில் 15 மாத காங்கிரஸ் அரசு கவிழும். 

கடந்த சனிக்கிழமையன்று ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், கட்சியில் இப்போது 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெங்களூரில் உள்ள 16 அதிருப்தி எம்எல்ஏக்களும் அடங்குவர்.அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முயன்ற திக்விஜய சிங் கைது!

.