இந்த அரிய வகை மீன் இப்போதுதான் முதன் முதலாக பார்க்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டில் மிகவும் அரிய வகை 'டைனோசர் மீன்' பிடிபட்டுள்ளது. அந்த மீனின் புகைப்படம் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மீன் பிடித் தொழிலுக்கு பெயர் பெற்றது நார்வே நாடு. இங்கு ஏராளமான மீன்பிடி நிறுவனங்கள் உள்ளன. அங்கு பணியாற்றும் ஆஸ்கர் லுந்தால் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றிருந்தார்.
அப்போது, வித்தியாசமான தோற்றத்துடன் மீன் ஒன்று அவரது வலையில் விழுந்தது. அதைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ஆஸ்கர், அதனை புகைப்படமாக எடுத்துக் கொண்டார்.
Take a look at the fish below:
இதுகுறித்து அவர் கூறுகையில், 'நாங்கள் ப்ளூ ஹாலிபட் என்ற அரிய வகை மீன்களை பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றிருந்தோம். அவை கடற்கரை பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும். அதற்காக சென்றபோது எங்களது வலையில் வித்தியாசமான தோற்றத்துடன் பெரிய கண்களுடன் மீன் ஒன்று விழுந்தது. அது பார்ப்பதற்கு டைனோசரை போன்று தோற்றம் கொண்டதாக இருந்தது. அதனை சுமார் அரை மணி நேரமாக பார்த்து ரசித்தேன்' என்று கூறியுள்ளார்.
ஆஸ்கர் பதிவிட்டுள்ள டைனோசர் மீனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. டைனோசர் மீன் என்பது சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மீனின் குடும்பத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.