This Article is From Jan 23, 2019

"யாரையும் பொருட்படுத்தாதே" சரா சாண்டர்ஸுக்கு ட்ரம்ப் அறிவுரை!

பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளிப்பது என்பது வெள்ளை மாளிகையின் அன்றாட பணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

செய்தி தொடர்பாளரின் செயளாலராக இருக்கும் சாண்டர்ஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை.

ஹைலைட்ஸ்

  • சாண்டர்ஸ், ஒரு மாதத்துக்கும் மேலாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை
  • யாரைப் பற்றியும் கவலைப்படவேண்டாம் - சாண்டர்ஸுக்கு ட்ரம்ப்பின் அறிவுரை
  • பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவதுமாக நிறுத்தப்படவில்லை - வெள்ளை மாளிகை
Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் செயளாலர் சரா சாண்டர்ஸுக்கு கூறியுள்ள செய்தியில், "யாரைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். போலியாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்ளும் நிருபர்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கவெல்லாம் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

 பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளிப்பது என்பது வெள்ளை மாளிகையின் அன்றாட பணிகளில் ஒன்று. ஆனால் செய்தி தொடர்பாளரின் செயளாலராக இருக்கும் சாண்டர்ஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. குறிப்பாக அரசு முடங்கிருப்பது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

"அவர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்றால் அவரிடம் ஆதாரமற்ற விஷயங்களையும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதுதான்" என்று ட்ரம்ப் தனது டிவிட்டில் கூறியுள்ளார். மேலும் இவர்களை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்" என்று சாண்டர்ஸிடம் கூறியுள்ளார்.

செய்தி தொடர்பாளர் பிரிவு தலைவர் ஆலிவியர் நாக்ஸ் கூறும்போது, "அமெரிக்க பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள் என்று எடுத்துக் கூறுவதுதான் இந்த மீடியாக்களின் வேலை. அதனை சரியாக சில ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதில்லை" என்றார்.

இந்த விஷயத்தில் ட்ரம்பின் ட்விட், ஹோகன் கிட்லே அவர்களின் பேட்டிக்கு பின் வந்துள்ளது. அவர் அந்த பேட்டியில் "சரா சாண்டர்ஸ் விரைவில் செய்தி மேடைக்கு திரும்புவார்" என்று கூறியிருந்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.