This Article is From Oct 15, 2018

பாலியல் புகார் குற்றச்சாட்டு : சாஜித் கானுக்கு இயக்குனர்கள் சங்கம் நோட்டீஸ்

தன்மீதான பாலியல் புகார் குறித்து 7 நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சாஜித் கானுக்கு பாலிவுட் இயக்குனர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

பாலியல் புகார் குற்றச்சாட்டு : சாஜித் கானுக்கு இயக்குனர்கள் சங்கம் நோட்டீஸ்

இயக்குனர் சாஜித் கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

Mumbai:

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் சாஜித் கான். இவர் மீது நடிகைகள் சலோனி சோப்ரா மற்றும் ரச்சேல் ஒய்ட் ஆகியோர் பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு சர்ச்சையான நிலையில், இன்றைக்கு பாலிவுட் இயக்குனர்கள் சங்கம் சாஜித்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் இன்னும் 7 நாட்களுக்குள் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து சாஜித் கான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகார் வலுவடைந்ததை தொடர்ந்து தற்போது சாஜித் கான் இயக்கி வரும் ஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பர்ஹத் சாம்ஜி படத்தை இயக்கி வருகிறார்.
 

.