This Article is From Aug 16, 2018

ஆர்ப்பரிக்கும் காவேரி, வெள்ளத்தில் மூழ்கிய கரையோர கிராமங்கள்

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவேரி மற்றும் பவானி நதிக் கரை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

ஆர்ப்பரிக்கும் காவேரி, வெள்ளத்தில் மூழ்கிய கரையோர கிராமங்கள்

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவேரி மற்றும் பவானி நதிக் கரை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்களும் சேதமடைந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடிகளுக்கு மேல் நீர் திறந்து விடப்படுகிறது. பவானி அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை தொட்டதால், உபரி நீர் வெளியேற்றபடுகிறது. இதனால் ஈரோடு பகுதியில் உள்ள, தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

ஹொகேனக்கல் பகுதியில் உள்ள கிராமங்கள் பலவும் மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேட்டூர் - எடப்பாடி சாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பவானி சாகர் அணை திறப்பால், பல கிராமங்களும், அங்கு விளைவிக்கப்பட்ட வாழை, மஞ்சள் போன்ற பயிர்களும் நீரில் மூழ்கி அழிந்துள்ளன. இதே போல் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள மாயனூர் தடுப்பணை நிரம்பியதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மலைபகுதியான வால்பாறையில், கன மழை காரணமாக 500 வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.