हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 06, 2019

எடியூரப்பா எனக்கு ரூ. 1000 கோடி கொடுத்தார் -தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ

நான் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு ரூ .700 கோடி ஒதுக்குமாறு அவரிடம் கேட்டேன். மேலும் ரூ. 300 கோடி சேர்த்து ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக கூறினார். அதன் பிறகு அந்த பணத்தையும் வழங்கினார்

Advertisement
இந்தியா

கிருஷ்ணராஜ் பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்காக ரூ. 1,000 கோடி தந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Mandya (Karnataka):

தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ நாராயண கவுடா செவ்வாய்கிழமை முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தனக்கும் கிருஷ்ணராஜ் பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்காக ரூ. 1,000 கோடி தருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது:-

யாரோ ஒருவர் என்னிடம் வந்து என்னை அதிகாலை 5 மணிக்கு பி.எஸ்.எடியூரப்பாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் (எச்.டி. குமாரசாமி அரசு வீழ்வதற்கு முன்பு). நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது, எடியூரப்பா வழிபட்டுக்கொண்டிருந்தார். நான் நுழைந்ததும், அவர் என்னை உட்காரச் சொன்னார், அவர் மீண்டும் முதலமைச்சராக அவரை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Advertisement

நான் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு ரூ .700 கோடி ஒதுக்குமாறு அவரிடம் கேட்டேன். மேலும் ரூ. 300 கோடி சேர்த்து ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக கூறினார். அதன் பிறகு அந்த பணத்தையும் வழங்கினார். இவ்வளவு பெரிய மனிதரை நான் ஆதரிக்க வேண்டுமில்லையா,அதைத்தான் நான் செய்தேன் என கூறினார். 

ஆனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை  என்று கூறினார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement