தமிழகத்தில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 1,323 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தில் 15 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
- நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது
தமிழகத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,025 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ் வருமாறு:
சென்னை - 233
கோயம்புத்தூர் - 127
திருப்பூர் - 80
ஈரோடு - 70
திண்டுக்கல் - 66
திருநெல்வேலி - 60
நாமக்கல் - 50
திருவள்ளூர் - 47
செங்கல்பட்டு - 47
திருச்சி - 46
தேனி - 44
மதுரை - 44
கரூர் - 41
நாகை - 40
ராணிப்பேட்டை - 38
தஞ்சை - 34
விழுப்புரம் - 30
தூத்துக்குடி - 26
சேலம் - 24
வேலூர் - 23
திருவாரூர் - 22
கடலூர் - 20
விருதுநகர் - 17
திருப்பத்தூர் - 17
கன்னியாகுமரி - 16
தென்காசி - 11
சிவகங்கை - 11
ராமநாதபுரம் - 10
நீலகிரி - 9
திருவண்ணாமலை - 8
காஞ்சிபுரம் - 7
கள்ளக்குறிச்சி - 3
பெரம்பலூர் - 1
அரியலூர் - 1
மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களில் சில ஆய்வுகளுக்குப் பின்னர் வேறு மாவட்டத்திற்குக் கீழ் மாற்றப்படலாம்.