This Article is From Oct 03, 2018

காங். சமூக வலைதள தலைவர் பிரிவில் இருந்து நீக்கம் - அப்செட்டில் திவ்யா

சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு தலைவர் பதவியில் இருந்து நடிகை திவ்யா நீக்கப்பட்டுள்ளார்.

காங். சமூக வலைதள தலைவர் பிரிவில் இருந்து நீக்கம் - அப்செட்டில் திவ்யா

கேப்ஷன் - மோடியை திருடன் என்று திவ்யா ட்விட்டரில் கூறியிருந்தார்.

New Delhi:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், பிரபல நடிகையாக இருந்தவருமான திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவுடைய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்த திவ்யா, ட்விட்டரில் மோடி ஒரு திருடன் என பொருள்படும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டார். 


இது பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அவர் மீது பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
நெருக்கடிகள் அதிகரித்ததை தொடர்ந்து அவரை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து கட்சி தலைமை நீக்கியது. இந்த தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிக்கில் ஆல்வா நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் திவ்யா அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுகுறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சமூக வலைதள பிரிவின் தலைவர் நிகில் ஆல்வாவை என்.டி.டி.வி. தொடர்பு கொண்டது. இதற்கு அவர் பதில் அளிக்கையில் வதந்திகள் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறினார். 

.