বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 04, 2018

130 வருடங்களாக பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் கிராமம்!

கனாக்குச்சி கிராமத்தில் வசிக்கும் மக்கள் குறைவான சத்தத்துடன், நெருப்பில்லாத, வேதிப்பொருட்கள் அற்ற அதே சமயம் தீபாவளியின் போது வானத்தை பிரகாசமாக்கும் புஷ்வானங்களை தயாரித்து வருகிறார்கள்

Advertisement
இந்தியா
Ganakkuchi, Assam:

இந்த தீபாவளிக்கு இரண்டு மணிநேரமே வெடிகள் வெடிக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அசாமில் 130 வருடங்களாக பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு ஒரு புது வழியினை கொடுக்கும் என்று பசுமை வெடி தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கனாக்குச்சி கிராமத்தில் வசிக்கும் மக்கள் 1885 ஆம் ஆண்டிலிருந்து குறைவான சத்தத்துடன், நெருப்பில்லாத, வேதிப்பொருட்கள் அற்ற அதே சமயம் தீபாவளியின் போது வானத்தை பிரகாசமாக்கும் புஷ்வானங்களை தயாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பல வருடங்களாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் குடும்பத்தின் வாரிசான கோப்ஜித் பதாக் கூறுகையில், எங்களுடைய பட்டாசுகளில் அதிகப்படியான வெடி மருந்துகள் சேர்க்கப்படுவதில்லை. அதிக மாசு ஏற்படுத்தாத ஒன்றாகும். நம்நாட்டில் இருக்கும் பிரச்சனை என்வென்றால் எது பசுமை வெடிகள் என்று கண்டறிந்து அங்கிகாரம் கொடுப்பதில்லை.

Advertisement

இதனால் எது பசுமை வெடி என்று மக்களால் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. இதற்கு ஒரு முடிவு வந்தால் எங்களைப் போன்ற உள்நாட்டு பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என்று தெரிவித்தார்.

பசுமை வெடிகள் முறையாக அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், அசாம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் பட்டாசுகளை விட உள்நாட்டு பட்டாசுகள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement