This Article is From Nov 07, 2018

தீபாவளி கொண்டாட்டம்: 4 நாட்களில் 600 கோடிக்கு மது விற்பனை!

இந்த ஆண்டு 2 நாட்களில் 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டை விட 34.5 சதவீதம் கூடுதலாகும்

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தில் தீபாவளியையொட்டி, இந்த ஆண்டு 4 நாட்களில் டாஸ்மாக் மதுகடைகளில் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையைவிட 34.5 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.

தீபாவளிக்காக கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இதனால், கடந்த சனிக்கிழமை 124 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும், திங்கள்கிழமையன்று 148 கோடி ரூபாய்க்கும், செவ்வாய்க்கிழமை 180 கோடி ரூபாய்க்கும் டாஸ்மாக் மது விற்பனையாகியுள்ளது. ஆகமொத்தம் இந்த 4 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

இப்படி மதுப்பிரியர்களின் உற்சாகத்தால், இப்போது, இலக்கை மிஞ்சி, தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை ஆகி உள்ளது. கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் 244 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 2 நாட்களில் 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டை விட 34.5 சதவீதம் கூடுதலாகும்.

Advertisement

இதன்மூலம், கடந்தாண்டை விட, இந்தாண்டு, தீபாவளியையொட்டி, 43 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக, மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
 

Advertisement