This Article is From Oct 29, 2019

நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு வெடிப்பின்போது 7 பேர் பலி!! சென்னையில் 31 பேருக்கு காயம்!

காற்று, ஒலி மாசு உள்ளிட்டவை காரணமாக இந்த ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு வெடிப்பின்போது 7 பேர் பலி!! சென்னையில் 31 பேருக்கு காயம்!

தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

New Delhi:

தீபாவளி கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 

ஆண்டுதோறும் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பல கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புதுவிதமான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் ஒலி மற்றும் காற்று மாசுபடுவது என்பது ஒருபக்கம் இருந்தாலும், தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் செய்கின்றனர்.

அதே நேரத்தில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சமீப காலமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் காலை 6 - 7 மணியிலும், இரவு 7 - 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கட்டுப்பாடுகள் மற்ற மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. 

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மட்டும் சுமார் 500 பேருக்கு பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 108 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 

சென்னையை பொறுத்தளவில் 31 பேர் காயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இளைஞர் ஒருவரின் ஆட்காட்டி விரல் பகுதி துண்டாகியுள்ளது. 
 

.