This Article is From Nov 08, 2018

இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் முதல் பெண் மெலனியா ட்ரம்ப், ட்ரம்புடன் சேர்ந்து இந்தியர்களுக்கு வாழ்த்து கூறினார்.

இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன டொனால்ட் ட்ரம்ப்!

"தீபாவளி பண்டிகை இந்திய-அமெரிக்க  உறவை மேம்படுத்த உதவியாக இருக்கிறது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்

Washington:

இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார். இந்தத் தீப ஒளித் திருநாள் இந்திய-அமெரிக்க உறவை வளர்த்துகொள்ள உதவியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முதல் பெண் மெலனியா ட்ரம்ப், ட்ரம்புடன் சேர்ந்து இந்தியர்களுக்கு வாழ்த்து கூறினார். இந்திய- அமெரிக்க உறவை வளர்க்க போராடும் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டினார்.

"தீபாவளி பண்டிகை இந்திய-அமெரிக்க  உறவை மேம்படுத்த உதவியாக இருக்கிறது" என்று ட்ரம்ப் இந்தியாவுக்கு அனுப்பிய தீபாவளி வாழ்த்தில் கூறியிருந்தார். " அமெரிக்கவின் வளர்ச்சிக்கு இந்திய-அமெரிக்க உறவு முக்கிய காரணமாக இருக்கிறது. எல்லா துறையிலும் சிறந்து விளங்க இந்த உறவு மிகவும் உதவியாக இருக்கிறது" என்றார்.

எல்லா மதத்தினரும் ஒன்று சேர்ந்து, ஒளி ஏற்றுவது, தீபாவளிக்கு உண்மையாக அர்த்ததை காட்டுகிறது. இருளை நீக்கி நல்லெண்ணங்களை புகுத்த இந்தப் பண்டிகை உதவியாக இருக்கிறது.

"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். இருநாட்டின் உறவை மேம்படுத்த இந்த பண்டிகைகள் உதவுகின்றன" என்று ஆர்.என்.சி-யைச் சேர்ந்த ரோனா மெக்டேனியல் கூறினார்.

.