ஹைலைட்ஸ்
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அக்டோபரில் ஓய்வு பெற்றார் பிராவோ
- கிரிக்கெட் வீரரான பிராவோ, பாட்டு வீடியோகளையும் வெளியிட்டு வருகிறார்.
- இப்போது 'ஆசியா' என்ற பாட்டை அவர் வெளியிட்டுள்ளார்.
DJ பிராவோவின் அடுத்த பாட்டு வெளியாகி வைரலாகியுள்ளது. ‘ஆசியா' என பெயரிடப்பட்டுள்ள இந்த பாட்டில் பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில், நம்ம தல தோனியும் தளபதி கோலியும் அடங்குவர்.
கிரிக்கெட் வீரரான பிராவோ, பாட்டு வீடியோகளையும் வெளியிட்டு வருகிறார். ‘சாம்பியன்' என்ற பிராவோவின் பாட்டு அதிரிபுதிரி ஹிட் ஆனது. அதை தொடர்ந்து இப்போது 'ஆசியா' என்ற பாட்டை அவர் வெளியிட்டுள்ளார்.
இதில் பல ஆசியா கிரிக்கெட் வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்னது. இலங்கையின் சங்கர்காரா, மஹிலா ஜெயவர்தனே, இந்தியாவின் தோனி, கோலி, வங்காளதேசத்தின் ஷாகிப், பாகிஸ்தானின் அப்ரிதி என பலரது பெயர் இந்த பாட்டில் இடம் பெற்றுள்ளது.
இதனை தன் சமூகவலைதளத்தில் அப்ரிதி பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சென்ற அக்டோபர் மாதம் ஓய்வு பெற்ற பிராவோ, தொடர்ந்து பல நாடுகளில் டி20 போட்டிகளில் அசத்தி வருகிறார்.
அடுத்த மாதம் நம்ம சிஎஸ்கே அணிக்காக பட்டைய கிளப்பவுள்ளார் பிராவோ.