This Article is From Jan 14, 2019

'ஆபரேஷன் லோட்டஸ்' - கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறதா பாஜக?

பாஜகவிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி மென்போக்குடன் நடந்து கொள்வதாக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் சிவக்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

'ஆபரேஷன் லோட்டஸ்' - கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறதா பாஜக?

பாஜக தனது முயற்சியில் வெற்றி பெறாது என்கிறார் சிவகுமார்.

Bengaluru:

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்து வருவதாக அம்மாநில அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் நடைபெறும் இந்த சதியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சிக்கியிருப்பதாகவும், மும்பையில் இருக்கும் அவர்கள் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சிவகுமார் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் குதிரை பேரம் நடந்து வருகிறது. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்பதுபற்றிய விவரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பாஜக சதி செய்கிறது என்பதை அறிந்தும் இந்த விவகாரத்தில் முதல்வர் குமாரசாமி மென்போக்குடன் நடந்து வருகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் என்பதுதான் அவரது பதிலாக உள்ளது.

அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் 24 மணி நேரத்திற்குள்ளாக பாஜகவின் சதிகளை வெளியுலகத்திற்கு ஆதாரத்துடன் தெரிவித்திருப்பேன். பாஜகவின் சதி குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் குண்டு ராவ் ஆகியோருக்கும் தெரியும். இவ்வாறு சிவகுமார் கூறினார்.

2008-ல் கர்நாடக முதல்வராக எட்டியூரப்பா இருந்தபோது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசினார் என்று புகார் எழுந்தது. இது 'ஆபரேஷன் லோட்டஸ்(தாமரை)' என்று பரவலாக அழைக்கப்பட்டது.

.