This Article is From Sep 16, 2019

ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்! அன்று..விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு!!

ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன்.

ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்! அன்று..விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு!!

ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும்.

ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அன்று மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் தேமுதிக சார்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

ஒர் ஆண்டுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.   

நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜயகாந்தை நேரில் பார்த்த தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜயகாந்த் பேச தொடங்கிய போது, தொண்டர்களின் ஆரவாரம் நீண்ட நேரம் அடங்கவே இல்லை. தொடர்ந்து அவர் பேசியதாவது, 

உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. 'ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன்'. அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன்.

இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று அவர் கூறினார். 

தொடர்ந்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினை போல் தேமுதிகவில் இளைஞரணி செயலாளர் பதவி எனக்கு வழங்கப்படுமா? என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு விஜயகாந்தின் மகன் என்ற பொறுப்பு ஒன்றே போதும். அதை காப்பாற்றுவதே எனது நோக்கம். உதயநிதி ஸ்டாலினோடு என்னை ஒப்பிடாதீர்கள். 

அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. எனக்கு இன்னும் 30 வயது கூட தாண்டவில்லை. தேமுதிகவின் தொண்டனாக, உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக எப்போது கட்சியை ஆரம்பித்ததோ அதில் இருந்து திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். இருந்தவரைக்கும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல் தேமுதிக ஆரம்பித்த பிறகு திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது. இனியும் வர முடியாது என்று உறுதியாக நான் கூறுகிறேன் என்று அவர் கூறினார்.

.