This Article is From Feb 22, 2019

மக்களவை தேர்தலில் போட்டியிட 24-ம் தேதி முதல் விருப்ப மனு : தேமுதிக அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை அளிக்கலாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

Highlights

  • தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
  • தொகுதி பங்கீட்டில் கருத்தொற்றுமை ஏற்படாததால் இழுபறி நீடிக்கிறது
  • 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேமுதிக

தேமுதிக உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் வரும் 24-ம்தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில், அதிமுக அணியில் பாமகவும், பாஜகவும் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாமகவுக்கு 7-ம், பாஜகவுக்கு 5-ம் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை நாளை மறுதினம் முதல் பெற்றுக் கொள்ளலாம் என தேமுதிக அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6, மாலை 5-மணிக்குள் அளிக்க வேண்டும் என்றும் தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது.

விருப்ப மனுவாக தொகுதிக்கு ரூ. 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ. 10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் விருப்பமனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேமுதிக.

Advertisement
Advertisement