அதிமுகவின் ஐடி பிரிவு, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்க எதுவும் சொல்லல!’ என்று பதிவிட்டு...
ஹைலைட்ஸ்
- சமூக வலைதளங்களில் இந்த மீம் வைரலாகி வருகிறது
- ஸ்டாலினின் அறிவிப்பை கேலி செய்யும் விதத்தில் மீம் உருவாக்கப்பட்டுள்ளது
- திமுகவினரிடையே இந்த மீம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக எதிர்க்கட்சியான திமுகவுக்கு நெருக்கமான செய்திச் சேனல் ஒன்றில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலான ஒரு மீம் ஒளிபரப்பானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக, திமுகவை சூசகமாக கேலி செய்துள்ளது.
அதிமுகவின் ஐடி பிரிவு, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்க எதுவும் சொல்லல!' என்று பதிவிட்டு, கூடவே அந்த சர்ச்சைக்குரிய ‘மீம் வீடியோவையும்' பகிர்ந்திருந்தது.
16 நொடிகளே ஓடும் அந்த வீடியோவில், மு.க.ஸ்டாலினின், ‘கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்,' என்று வலியுறுத்திய அறிவிப்பு கேலி செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோ: