This Article is From Apr 15, 2020

திமுகவின் அனைத்து கட்சி ஏப்ரல் 16-ம்தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்! ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Highlights

  • ஏப்ரல் 15-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமென திமுக அறிவித்தது
  • தலைவர்கள் நேரில் பங்கேற்க போலீசார் தடை விதித்தனர்
  • ஏப்ரல் 16-ம்தேதி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிப்பு

திமுகவின் அனைத்து கட்சி ஏப்ரல் 16-ம்தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 1,204 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இருக்கிறது. 

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கிடையே மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி கொரோனா மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisement

சமீபத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழக அரசு ஏற்று நடக்கும் என தெரிவித்திருந்தார். முதல்வரின் கருத்தை திமுக கடுமையாக விமர்சித்தது. 

இப்படியாக கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடக்கம் முதற்கொண்டு முட்டலும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. 

Advertisement

இந்த நிலையில், ஏப்ரல் 15-ம்தேதியான நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொரோனா விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த கூட்டத்தில் தலைவர்கள் நேரடியாக வந்து பங்கேற்க போலீசார் தடை விதித்தனர். காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தினர்.
 

இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஏப்ரல் 16-ம்தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisement