This Article is From Feb 07, 2019

திமுக கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன: திருமாவளவன்

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக திமுக கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன: திருமாவளவன்

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக திமுக கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் திமுக தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்.

டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 

.