This Article is From Mar 15, 2020

தி.மு.க பொதுக் குழு கூட்டம் தேதி அறிவிப்பு

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
தமிழ்நாடு Posted by

1977ஆம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு  வகித்து வந்த இனமான பேராசிரியர் என்று அன்புடன் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்பட்ட க. அன்பழகன் (98) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த 7ஆம் தேதி காலமானார்.

1967 முதல் 1971 ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஒருமுறையும், சட்டமன்ற உறுப்பினராக 9 முறை என க. அன்பழகன் பல பொறுப்புகளை வகித்து வந்திருந்தார்.

இவரின் மறைவு என்பது திமுகவிற்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாக இருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் 29-3-2020 அன்று காலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Advertisement

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement