This Article is From Feb 10, 2020

“கழகத் தேர்தல்!”- திமுக அவசரமாக கூட்டும் ம.செ-க்களின் சந்திப்பு!!

பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெயரில், திமுக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Written by

கழகத் தேர்தலைத் தவிர எதைப் பற்றி விவாதிக்க திமுக, இந்த திடீர் சந்திப்பை ஒருங்கிணைக்கிறது என்கிற தகவல் இல்லை. 

தமிழக எதிர்க்கட்சியான திமுக, தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வரும் 17 ஆம் தேதி கூட்ட உள்ளது. இது குறித்தான அறிக்கையை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

திமுக வெளியிட்ட அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 17-02-2020 திங்கட்கிழமை மாலை 5:00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: கழகத் தேர்தல்” என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

கழகத் தேர்தலைத் தவிர எதைப் பற்றி விவாதிக்க திமுக, இந்த திடீர் சந்திப்பை ஒருங்கிணைக்கிறது என்கிற தகவல் இல்லை. 

Advertisement
Advertisement