This Article is From Jul 29, 2020

ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: தேசிய தலைவர்களின் ஆதரவை கோரும் மு.க.ஸ்டாலின்!

ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.

ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: தேசிய தலைவர்களின் ஆதரவை கோரும் மு.க.ஸ்டாலின்!

ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: தேசிய தலைவர்களின் ஆதரவை கோரும் மு.க.ஸ்டாலின்! (FILE)

ஹைலைட்ஸ்

  • ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: தேசிய தலைவர்களின் ஆதரவை கோரும் மு.க.ஸ்டாலின்!
  • மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது
  • 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்
Chennai:

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்களை தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக, காங்கிரஸ் அல்லாத முதல்வர்களான, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானாவின் கே.சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முதல்வர்களுடன் முறையே பேசியதாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அதனை அமல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், உயர் நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பிக்கு பின்னர் தேசிய தலைவர்களுடன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அதில், கூடிய விரைவில் உறுப்பினர்கள் குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது

மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவைகளுக்கு அவர்களின் ஆதரவைக் கோரியுள்ளார். 

இதுதொடர்பாக, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, என்சிபி தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் என்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரிடமும் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.