This Article is From Dec 20, 2018

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது - திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பேனர்கள் வைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்களை வைக்கக் கூடாது என்று திமுகவினரை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுக்கூட்டம், தலைவர்களின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கத்தினரும் பேனர்களை வைத்து வருகின்றனர். இவற்றில் சில பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இடையூறாக வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் பேனர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ''பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும்.

Advertisement

 

அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!" என்று கூறியுள்ளார். இந்த உத்தரவை வரவேற்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Advertisement