Read in English
This Article is From Mar 15, 2019

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்..?- பட்டியல் வெளியீடு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்துள்ளன

Advertisement
இந்தியா Written by

இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஸ்டாலின் தலைமையில் கூடினார்கள்.

Highlights

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது
  • திமுக கூட்டணியில் முதல் இணைந்தது காங்கிரஸ்தான்
  • பின்னர் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இணைந்தன

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்துள்ளன. அந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். 

இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஸ்டாலின் தலைமையில் கூடினார்கள். அப்போது பேச ஆரம்பித்த ஸ்டாலின், ‘நாங்கள் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'. தமிழக உரிமைகளை மீட்டெடுக்க இந்தக் கூட்டணி பாடுபடும். இனி பட்டியலைப் படிக்கிறேன்.

திமுக- சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்திய, திருபெரும்புத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குரிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், மைலாடுதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை தஞ்சை ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடும்

Advertisement

காங்கி- திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடும். மதிமுக- ஈரோடு. சிபிஎம்- கோவை, மதுரை. சிபிஐ- திருப்பூர், நாகை. இந்திய.யூ.மு.லீ- ராமநாதபுரம் விசிக- விழுப்புரம், சிதம்பரம். கொ.ம.தே.க- நாமக்கல். ஐ.ஜே.கே- பெரம்பலூர் ஆகிய தொகுகளில் போட்டியிடும்' என்றார்.

Advertisement