This Article is From Mar 05, 2019

நிறைவடைந்த திமுக கூட்டணி தொகுதி பங்கீடு… தேமுதிக-வுக்கு டாட்டா!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்  கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக

Advertisement
தமிழ்நாடு Written by

தொகுதி பங்கீட்டை முடிந்துவிட்டதால் தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாது சூழல் உருவாகியுள்ளது.

Highlights

  • திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குத்தான் முதலில் தொகுதி ஒதுக்கப்பட்டது
  • அதைத் தொடர்ந்து பிற கட்சிகளுக்கும் சுமூகமாக தொகுதி பங்கீடு செய்யப்பட்டது
  • தேமுதிக, இன்னும் மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்  கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. மீதம் இருக்கும் 20 தொகுதிகளில் திமுக-வே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் முதன்முதலாக அதிகாரபூர்வமாக இணைந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிக்கு திமுக, 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது. அதற்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இறுதியாக மதிமுக-வுக்கு 1 மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ராஜ்யசபா சீட் மூலம் வைகோ, மீண்டும் மேல் சபை எம்.பி-யாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ‘திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும். கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்கின்ற விபரம் இன்னும் 2 நாட்களில் தெரிவிக்கப்படும்' எனக் கூறியுள்ளார். 

Advertisement

தொகுதி பங்கீட்டை முடிந்துவிட்டதால் தேமுதிக, திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பில்லாது சூழல் உருவாகியுள்ளது. இன்று தேமுதிக சார்பில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி குறித்து முடிவெடுக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க - "விஜயகாந்துடன் - ஓ.பி.எஸ்., ஜெயக்குமார் சந்திப்பு"

Advertisement
Advertisement