அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன.
இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. இந்த பரபரப்பான சூழலில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை திமுக – காங்கிரஸ் இன்று வெளியிடுவதாகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 9 இடங்கள்வரை ஒதுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கடந்த நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மாலையில் அண்ணா அறிவாலயம் வந்த திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன.
இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. இந்த பரபரப்பான சூழலில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை திமுக – காங்கிரஸ் இன்று வெளியிடுவதாகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 9 இடங்கள்வரை ஒதுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மாலையில் அண்ணா அறிவாலயம் வந்த திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.