This Article is From Feb 11, 2019

''பாஜக அழுத்தத்தால் தன்னிலை மறந்து உளறுகிறார்'' - கமலை விமர்சித்த திமுக நாளிதழ்

திமுக மற்றும் கமல் ஹாசன் இடையே கடும் விமர்சனங்கள் சமீப காலமாக எழத் தொடங்கியுள்ளன. திமுகவின் நாளிதழான முரசொலியில் கமல்ஹாசனை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

முரசொலியில் ரஜினிகாந்த் மட்டுமே இதுவரையில் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

Highlights

  • திமுகவை கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்
  • ரஜினிகாந்தை மட்டுமே திமுக நாளிதழ் விமர்சித்து வந்தது
  • பாஜகவின் அழுத்தத்தால் கமல் பிதற்றுகிறார் என்கிறது முரசொலி

பாஜக அழுத்தத்தால் தன்னிலை மறந்து கமல்ஹாசன் பிதற்றுகிறார் என்று திமுக நாளிதழான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 

நடிகராக இருந்த கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது பல்வேறு தலைவர்களையும் மக்களையும் சந்தித்து பேசி அவர் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலின் கட்சி அறிவித்துள்ளது. 

அவர் மதசார்பற்ற கூட்டணிக்கு வந்து திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தினார். பின்னர் கமல் திமுகவை விமர்சித்ததை தொடர்ந்து கே.எஸ். அழகிரி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 

இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கமல்ஹாசன் குறித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

Advertisement

பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றபோதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கலைஞர் அழைத்தபோதும் திமுக ஊழல் கட்சியாக தோன்றவில்லை. அவ்வை சண்முகியாக வேடம் கட்டி கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற போதும் ஊழல் கட்சியாக தோன்றவில்லை. ஆனால் இப்போது ஊழல் கட்சியாக திமுக உருவெடுத்திருப்பதற்கு என்ன காரணம்?

பாஜக அழுத்தம் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி. ஆளானப்பட்டதாக கருதப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் மிரட்டலுக்கு பயந்து அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் வரலாற்றை தெரிந்தவர்கள் திமுகவினர். 

Advertisement

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 
 

Advertisement