This Article is From Apr 28, 2019

திமுக-வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி காலமானார்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்.பி-யான வசந்தி ஸ்டான்லி, நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

திமுக-வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி காலமானார்!

வசந்தி ஸ்டான்லி, திமுக சார்பில் 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்.பி-யான வசந்தி ஸ்டான்லி, நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 56. 

வசந்தி ஸ்டான்லி கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

வசந்தி ஸ்டான்லி, திமுக சார்பில் 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். எம்.பி-யாக இருந்தபோது அவர் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு வசந்தி ஸ்டான்லி, திமுக-வுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார். ஆனால், உடல் நலம் ஒத்துழைக்காததால் அவரால் பரப்புரையில் ஈடுபட முடியவில்லை. இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.