This Article is From Dec 29, 2018

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்

Advertisement
Tamil Nadu Posted by

திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் க.அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அன்பழகனுக்கு திடீரென இன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சளித்தொல்லை காரணமாக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
 

Advertisement
Advertisement