This Article is From Oct 31, 2019

திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம்தேதி நடைபெறும்- பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம்தேதி நடைபெறும்- பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு!!

ராயப்பேட்டையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் 6-ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 10-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். 

அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

திமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கழகச் சட்ட திட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் தோல்வியை தழுவின. இது சம்பந்தமாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. 
 

.