கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயலால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Chennai: கஜா புயல் நிவாரணம் குறித்து தவறான தகவல்களை திமுக பரப்பி வருவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்ததுடன், 50-க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர்.
நிவாரண பணியில் அனைத்து கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசின் நிவாரண பணிகள் குறித்து திமுக தவறான தகவல்களை பரப்பி வருவதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் கட்சி இதழான நமது புரட்சி தலைவர் அம்மாவில், ''தமிழக அரசு சேலை, வேட்டி உள்பட 25 அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தவறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. உண்மை என்னவென்றால் அரசு தரமான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது.'' என்று கூறப்பட்டுள்ளது.